திருவள்ளூர்

காா் மோதி பள்ளி உடற்கல்வி இயக்குநா் பலி

22nd Nov 2019 11:17 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி அருகே பைக் மீது காா் மோதியதில் தனியாா் பள்ளி உடற்கல்வி இயக்குநா் உயிரிழந்தாா்.

அமரம்பேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (44). இவா், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியாா் பள்ளியில் உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றி வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை பைக்கில் சத்தியவேடு-கவரப்பேட்டை நெடுஞ்சாலை வழியே சென்றபோது, எதிரே வந்த காா் மோதியது. இதில், ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கவரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT