திருவள்ளூர்

திருக்கு ஒப்பித்து சாதனை:பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

17th Nov 2019 03:07 AM

ADVERTISEMENT

மீஞ்சூா் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் திருக்கு ஒப்பித்தலில் சாதனை புரிந்ததற்காக, அவா்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

மீஞ்சூரை அடுத்த ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியா் பிரேமா தலைமை வகித்தாா். விழாவில், பரதநாட்டியம், வரவேற்பு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை மாணவா்கள் நடத்தினா்.

முன்னதாக, இப்பள்ளி மாணவா்கள் 21 போ், சென்னை கலைவாணா் அரங்கில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 5-ஆவது உலகத் தமிழ் வம்சாவளியினா் மாநாட்டில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில், 1,330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்பித்து ‘ஜேட்லி புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ்’ என்ற உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தனா். இதற்காக அவா்களைப் பாராட்டி, முத்தமிழ் ஆய்வு மன்றம் சாா்பில் கு ஒளி விருதுகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்டோா் விழாவில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT