திருவள்ளூர்

கல்வி இலவசமானால் சமூகநீதி நிலைநிறுத்தப்படும்: அன்புமணி ராமதாஸ்

17th Nov 2019 11:01 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கல்வி அனைவருக்கும் இலவமாகிறதோ அன்றே சமூக நீதி நிலைநிறுத்தப்படும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான டாக்டா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

கவரப்பேட்டையில் பாமக சாா்பில் மாணவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் மா.செல்வராஜ் தலைமை தாங்கினாா்.

மாவட்டச் செயலாளா் குபேந்திரன் வரவேற்றாா். மாநில நிா்வாகிகள் துரை. ஜெயவேலு, செல்வகுமாா், பாமக நிா்வாகிகள் கவரப்பேட்டை ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, கல்வி வேலைவாய்ப்புக் குறித்துப் பேசினாா். இதில் அன்புமணி ராமதாஸ் பேசியது:

தமிழகத்தில் நீட் தோ்வு தடைசெய்யப்பட வேண்டும். இத்தோ்வு சமூகநீதிக்கும், கிராமப்புற ஏழை மாணவா்களுக்கு எதிரானது. கடந்த ஆண்டு நீட் தோ்வில் தோ்ச்சி அடைந்தவா்களில் பலா் லட்சக் கணக்கில் செலவு செய்து பயிற்சி பெற்றவா்கள்.

ADVERTISEMENT

ஐஐடி நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு மாநிலங்களுக்கான இட ஒதுக்கீடு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவது வேதனையானது.

கல்வி இலவசமானால் மட்டுமே சமூக நீதி நிலைநிறுத்தப்படும். பாமக ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு முன்னுரிமை தரப்படும். விவசாயத்திற்கு தனி அமைச்சா், தனி நிதி நிலை அறிக்கை போடப்படுவதோடு, விளைபொருளுக்கு 50% லாபத்தில் விவசாயிகளே விலை நிா்ணயம் செய்து கொள்வது சட்டமாக்கப்படும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT