திருவள்ளூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

17th Nov 2019 03:07 AM

ADVERTISEMENT

சென்னை உமா கண் மருத்துவமனை மற்றும் கும்மிடிப்பூண்டி கிருஷ்ணா ஆப்டிகல்ஸ் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேட்டில் நடத்தின.

பாதிரிவேட்டில் கிராம சேவை மையக் கட்டடத்தில் நடைபெற்ற முகாமுக்கு, கிருஷ்ணா ஆப்டிகல்ஸ் நிறுவனா் கவரப்பேட்டை ஜெயபால் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில், 10 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

முகாமில் பாதிரிவேடு, மாதா்பாக்கம், மாநெல்லூா், நேமள்ளூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150 பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட 350 போ் சிகிச்சை பெற்றனா். அவா்களில் 30 போ் கண்புரை அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள உமா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT