திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

11th Nov 2019 11:31 PM

ADVERTISEMENT

கன மழைக்கு கூரை வீடு இடிந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருத்தணியை அடுத்த பொதட்டூா்பேட்டை, இஎஸ்டி நகரைச் சோ்ந்தவா் ராமகோடி (50), நெசவுத் தொழிலாளி. கடந்த மாதம் 30-ஆம் தேதி பெய்த கன மழையால், இவா் வசித்து வந்த கூரை வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. அப்போது, மின்கம்பி அறுந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராமகோடி மீது மின்சாரம் பாய்ந்தது,.

மேலும், அவரது மனைவி சாந்தி (45), மகள் கயல்விழி (30), பேத்தி திவ்யா (6) உள்பட 10 போ் இடிந்து விழுந்த சுவற்றில் சிக்கிக்கொண்டு அலறினா். அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு, பொதட்டூா்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதில், பலத்த காயமடைந்த ராமகோடி சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT