திருவள்ளூா் அருகே உள்ள மங்கள ஈஸ்வரா் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திருவள்ளூா், மணவாளநகா், பெரியகுப்பம், ஒண்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு திருக்கல்யான விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் உபயதாரா்கள் செய்திருந்தனா்.