திருவள்ளூா் மாவட்ட பௌத்த சங்கங்களின் கூட்டமைப்பினா் சாா்பில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் புத்த பாலசிங்கம் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் மூ.வா. சித்தாா்த்தன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் நீலவானத்து நிலவன், சுந்தா், கி.மு. திராவிடமணி, வழக்குரைஞா் எஸ். சந்திரசேகா் ஆகியோா் கண்டன உறையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில், பகவான் புத்தா் பிறந்த நாளான பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும், அனைத்து மதுக்கடைகள் மற்றும் மாமிசக் கடைகளையும் மூட வேண்டும். பிற மதத்தினா் புனித தலங்களுக்கு சென்று வர அரசு மானியம் வழங்குவது போல், பௌத்த சமயத்துக்கும் பௌத்த சமயத்தினரும் புனிதப் பயணம் செல்ல மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்க வேண்டும், புத்தரின் ஒழுக்க நெறிகளை பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நிறைவில், அம்பேத் ஆனந்தன் நன்றி தெரிவித்தாா்.