மீஞ்சூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வேன் ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மீஞ்சூா் அருகே 4 வயது பெண் குழந்தை, அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் படித்து வந்தது. அந்த குழந்தை தினமும் பள்ளிக்கு வேனில் சென்றபோது ஓட்டுநா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த குழந்தையின் பெற்றோா் பொன்னேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து மீஞ்சூரைச் சோ்ந்த 37 வயது வேன் ஓட்டுநரை கைது செய்தனா்.