மேளப்பூடி வேணுகோபால சுவாமி கோயிலில் கருட சேவை

மேளப்பூடி வேணுகோபால சுவாமி கோயிலில் சனிக்கிழமை கருட சேவை நடைபெற்றது.

மேளப்பூடி வேணுகோபால சுவாமி கோயிலில் சனிக்கிழமை கருட சேவை நடைபெற்றது.
பள்ளிப்பட்டை அடுத்த மேளப்பூடியில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயில் வரலாற்று சிறப்பு பெற்றது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் உரிய பராமரிப்பின்றி இருந்தது. எனினும், கிராம மக்கள் ஒன்று கூடி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயிலைச் சுற்றி இருந்த செடி, கொடிகள், முள் புதர்களை அகற்றி சுத்தம் செய்து, பூஜை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பிரம்மோற்சவத்தை மீண்டும் நடத்தும் முயற்சியில் பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வைகாசி விசாகத்தையொட்டி, சனிக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது. உற்சவருக்கு காலையில் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவர் ருக்மணி சத்தியபாமா சமேத வேணுபோபால சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு கருட சேவையையொட்டி, ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார்.
இதில் பக்தர்கள் திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். சுவாமி வீதி உலாவின்போது, வாண வேடிக்கை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com