புதிய ஆழ்துளைக் கிணறு மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம்

பொன்பாடி கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தனியார் நிறுவனம் சார்பில் ஆழ்துளைக்

பொன்பாடி கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தனியார் நிறுவனம் சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, செவ்வாய்க்கிழமை குடிநீர் விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டது.
திருத்தணியை அடுத்த பொன்பாடி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 
இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கிராமப் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை சார்பில், ஆழ்துளைக் கிணறு அமைத்து, குழாய் இணைப்பு மூலம் குடிநீர் விநியோகம் செய்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அக்கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில், ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பொன்பாடி கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இதில், தனியார் தொழிற்சாலை அதிகாரிகள் சுவாமிநாதன், ரவிச்சந்திரன், தீபக், விஜயகுமார், பொன்பாடி கிராம மக்கள் பங்கேற்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com