பணி ஓய்வு பெற்ற தலைமை மருத்துவருக்கு பாராட்டு

கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராகப் பணியாற்றிய கண்ணகி பணி ஓய்வு பெற்றதையடுத்து அவருக்குப் பாராட்டு விழா கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. 
பணி ஓய்வு பெற்ற தலைமை மருத்துவருக்கு பாராட்டு


கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராகப் பணியாற்றிய கண்ணகி பணி ஓய்வு பெற்றதையடுத்து அவருக்குப் பாராட்டு விழா கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. 
அவர் கடந்த 23 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவச் சேவையாற்றினார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பொறுப்பேற்று, செவ்வாய்க்கிழமை (ஏப்.30) பணி ஓய்வு பெற்றார். அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
மருத்துவர் கென்னடி முன்னிலை வகித்தார். தலைமை செவிலியர் சசிவர்ணம் வரவேற்றார். 
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவர் மருத்துவர் கோவிந்தராஜ், மருத்துவமனை ஊழியர்கள் வாழ்த்தினர். மருத்துவர் கண்ணகி ஏற்புரையாற்றினார். அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது
நெடுஞ்சாலை ஆய்வாளர் ஓய்வு: கும்மிடிப்பூண்டியில் நெடுஞ்சாலைத் துறையில் 38 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆய்வாளர் அசோக்குமாருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. 
இந்த நிகழ்வில் நெடுஞ்சாலை துறை உதவி செயற் பொறியாளர் பாலசந்தர் உதவி பொறியாளர் டில்லிபாபு உள்ளிட்டோர் பங்கேற்று 38ஆண்டுகள் கும்மிடிப்பூண்டியில் சிறப்பாகப் பணியாற்றிய அசோக்குமாரை வாழ்த்தினர். நிகழ்வில் நெடுஞ்சாலை துறை சார்பில் அசோக்குமாருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
காவல் உதவி ஆய்வாளர் ஓய்வு: கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த புருஷோத்தமன் தனது 33 ஆண்டு காவல் துறைப் பணியில் இருந்து திங்கள்கிழமை ஓய்வு பெற்றதையடுத்து அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி கல்பனா தத் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் காவல் துறை மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர். அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com