கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜே.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த வரவேற்பு விழாவிற்கு டி.ஜே.எஸ். கல்விக் குழுமத் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். செயலாளர் டி.ஜே.ஆறுமுகம், துணைத் தலைவர் டி.ஜே.தேசமுத்து, இயக்குநர்கள் கபிலன், விஜயகுமார், கபிலன், தினேஷ், தமிழரசன், நிர்வாக அலுவலர் பாபு முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பிச்சைமணி வரவேற்றார்.
பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, சென்னை புரசைவாக்கம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஆர்.கனகராஜ் ஆகியோர் பேசினர். தொடர்ந்து விழாவில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தகப்பை, கையேடுகள் வழங்கப்பட்டன. கல்லூரி அளவில் தொழில்நுட்ப அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், அதிக தேர்ச்சி விகிதத்தைத் தந்த ஆசிரியர்களுக்கு விழாவில் ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமியும் டி.ஜே எஸ். கல்விக் குழுமத் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜனும் வழங்கினர்.