பொன்னேரி நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை ஏற்பட்ட மின்தடையால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொன்னேரி நகரப் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 12 மணியளவில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலை 3 மணி வரை மின் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து சனிக்கிழமை அதிகாலை மின்வாரிய அலுவலக வாயில் அருகே பொன்னேரி-திருவொற்றியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பொன்னேரி போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி மின் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததை அடுத்து போராட்டம்
கைவிடப்பட்டது.