புழல் அருகே 10-ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாதவரத்தை அடுத்த புழல் மாதவன் நகர் 5-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுரேகா(40). அவர் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அவரது கணவர் அருண் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
சுரேகாவின் மகள் சரிகா(18) புழல் லட்சுமிபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். மகன் அஜய்(15) பத்தாம் வகுப்பை முடித்து, டிப்ளமோ படிப்பில் சேர்வதற்குக் காத்திருந்தார்.
இந்நிலையில், சுரேகா வெள்ளிக்கிழமை பணிக்குச் சென்று விட்டு, வீடு திரும்பியபோது மகன் அஜய் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அஜய்யின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.