திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தீமிதி விழா நடைபெற்றது.
திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா


கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தீமிதி விழா நடைபெற்றது.
 ஆத்துப்பாக்கத்தில் உள்ள இக்கோயிலில் கடந்த 1990-ஆம் ஆண்டு கடைசியாக தீமிதித் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து பல ஆண்டுகளாக தீமிதி விழா நடைபெறாத சூழலில், ஊர் மக்கள் கூடி பேசி இந்த ஆண்டு விழாவை நடத்த முடிவெடுத்தனர்,
இதைத்தொடர்ந்து, 10 நாள் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த 14-ஆம் தேதி விநாயகர் பூஜை, கலச பூஜை, நவக்கிரஹ ஹோமம், அம்மனுக்கு அபிஷேகம், கொடியேற்றுதல், சுவாமி வீதியுலா உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, ஜூன் 15-ஆம் தேதி கலச பூஜை, நவக்கிரக ஹோமம், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு ஆகியவை நடைபெற்றன. பின்னர், அம்மன் வீதியுலா நடைபெற்றது.
 தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) சிறப்புப் பூஜை, ஹோமங்களுக்குப் பிறகு காப்பு கட்டிய சுமார் 420 பக்தர்கள் தீமித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். 
 இதைத்தொடர்ந்து, வாண வேடிக்கை, திருவீதி உலா நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்குப் பின் ஆத்துப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த தீமிதி விழாவைக் காண 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com