திருவள்ளூர்

திருத்தணி சர்க்கரை ஆலையில் கரும்பு மகசூல் கருத்தரங்கம்

31st Jul 2019 04:17 AM

ADVERTISEMENT


 திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் ஓர் ஏக்கரில் அதிக கரும்பு மகசூல் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  
ஓர் ஏக்கரில் 100 டன் மகசூல் பெறுதல் குறித்த இந்த கருத்தரங்கிற்கு ஆலையின் மேலாண்மை இயக்குநர் வே.சாமுண்டீஸ்வரி தலைமை வகித்தார். தலைவர் டி.பொன்னுரங்கம் முன்னிலை வகித்தார். கரும்பு அலுவலர் எஸ்.அன்புதாசன் வரவேற்றார்.  தலைமை கரும்பு அலுவலர் இ.குணசேகரன், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் ஜி.பாண்டியன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பி.ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  
ஓர் ஏக்கரில் 100 டன் மகசூல் கரும்பு சாகுபடி செய்தல், இயந்திரமயமாக்கல், நீடித்த நிலையான கரும்பு சாகுபடித் திட்டம், சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தல் குறித்து கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் எம்.ஜெயச்சந்திரன், என்.சண்முகநாதன், வி.ரவிச்சந்திரன், எஸ்.பசுபதி, திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியை ஆர்.மணிமேகலை ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.  திருவள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். 
நிறைவாக கரும்பு அலுவலர் டி.கே.வேடியப்பன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT