திருவள்ளூர்

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

31st Jul 2019 04:15 AM

ADVERTISEMENT


தாமரைபாக்கம் அருகே உள்ள வெங்கல் ஊராட்சியில் குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
வெங்கல் ஊராட்சியில் ஆழ்துளைக் குழாய் அமைத்து, குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஊராட்சியின் அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 10 நாள்களாக குடி தண்ணீர் வரவில்லையாம். இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். 
அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்றச் செயலாளர் உமாநாத், குடிநீருக்காக அம்மாண்பாக்கத்தில் இரண்டு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பணிகளும் முடிந்தநிலையில், மின் இணைப்பு வழங்கியதும்  குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT