திருவள்ளூர்

பொன்னேரி ஏடிஎம்மில் நூதன திருட்டு

27th Jul 2019 04:20 AM

ADVERTISEMENT


பொன்னேரி ஏடிஎம் ஒன்றில் பெண் ஒருவரிடம் இருந்து  ரூ.16 ஆயிரத்தை நூதனமாக திருடிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர். 
பொன்னேரி அடுத்த கிளிக்கோடி அண்டவாயல் பகுதியைச் சேர்ந்த குமரேசன் மனைவி சாந்தி(42). இவர் கடந்த 23-ஆம் தேதி பொன்னேரி தேரடிச் சாலையில் இருக்கும் தேசிய வங்கி ஒன்றின் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றார். ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாததால், அங்கு நின்றிருந்த நபரிடம் பணம் எடுத்து தரும்படி ஏடிஎம் கார்டை கொடுத்து ரகசிய எண்ணையும் தெரிவித்துள்ளார். 
 அந்த நபர் பணம் எடுத்து தருவது போல் ஏடிஎம் இயந்திரத்தில் அட்டையை செருகி விட்டு, பணம் வரவில்லை வேறு இடத்தில் சென்று எடுத்து கொள்ளுங்கள் என்றுக்கூறி திரும்ப அளித்துள்ளார்.  இதனால் பணம் எடுக்காமலேயே தனது ஊருக்கு சாந்தி சென்று விட்டார். வீட்டிற்கு  சென்ற பின்,  கையில் வைத்திருந்த செல்போனை பார்த்தபோது அவருடயை கணக்கில் ரூ.16ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக  குறுஞ்செய்தி வந்திருந்தது. 
அதிர்ச்சியடைந்த சாந்தி, தன்னிடம் இருந்த ஏடிஎம் அட்டையை பார்த்தபோது அது அவருடையது இல்லை என தெரிய வந்தது. ஏடிஎம் அறையில் இருந்த நபர், எடிஎம் அட்டையை மாற்றி கொடுத்து விட்டு இவருடைய கணக்கில் இருந்து ரூ.16ஆயிரத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது.  இதையடுத்து பொன்னேரி காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்துள்ளார். போலீஸார் நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT