திருவள்ளூர்

மதுக் கடையை உடைத்து ரூ. 8.50 லட்சம் திருட்டு

16th Jul 2019 04:20 AM

ADVERTISEMENT


கும்மிடிப்பூண்டியில் டாஸ்மாக் மதுக் கடையின் இரும்பு ஷட்டரை உடைத்து ரூ. 8.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பஜார் ஏரிக்கரைப் பகுதியில் அரசு மதுக் கடை உள்ளது. இப்பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை ரோந்து சென்ற பயிற்சி உதவி ஆய்வாளர் கிருபாநந்தன், கடையின் இரும்பு கேட் மற்றும் இரும்பு ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு, கடை திறந்து கிடந்ததைக் கண்டார். கடையின் உள்பக்கத்தில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. 
இதையடுத்து, அவர் கடையின் மேற்பார்வையாளரான பெரியபாளையத்தை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (46), கும்மிடிப்பூண்டி அப்பாவரத்தைச் சேர்ந்த கடை விற்பனையாளர் சுரேஷ் (41) ஆகியோருக்கு கும்மிடிப்பூண்டி போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
அவர் கடைக்கு வந்து பார்த்தபோது, இரும்பு லாக்கரை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 3 நாள் வசூல் தொகையான ரூ. 8 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. மேலும், கடையில் இருந்த 2 பெட்டி மதுபாட்டில்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT