திருவள்ளூர்

விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலி

12th Jul 2019 04:17 AM

ADVERTISEMENT


ஜோலார்பேட்டை அருகே விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
அண்ணான்டப்பட்டி ஆலமர பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராமதாஸ் (46). இவர், கடந்த 9-ஆம் தேதி திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை நோக்கி ஆட்டோவில் சென்றார். ஆசிரியர் நகர் அருகே தனியார் பள்ளி எதிரே வேகத்தடையை கவனிக்காமல் சென்றதால், ஆட்டோவில் இருந்த இரும்புக் கம்பி ராமதாஸ் மீது குத்தியது. 
தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT