திருவள்ளூர்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

12th Jul 2019 09:23 AM

ADVERTISEMENT

சோழவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ்,  அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நடைபெற்ற முகாமில் மாதவரம், பொன்னேரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் பங்கேற்றனர். முகாமுக்கு வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களிடம், காது கேளாமை,  கை, கால்களின் இயக்க குறைபாடு உள்ளிட்டவற்றை அறிந்து, அதற்கேற்ப மருத்துவ சிகிச்சையையும் தக்க ஆலோசனைகளையும் வழங்கினர். 
முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையும், உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டன. முகாமின் ஒரு பகுதியாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.  இதில், சோழவரம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT