திருவள்ளூர்

மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பீட்டு மருத்துவ முகாம் விழிப்புணர்வுப் பேரணி

6th Jul 2019 12:23 AM

ADVERTISEMENT

மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பீட்டு மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வுப் பேரணியை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில், அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மைய அலுவலகத்தில், பிறப்பு முதல், 18 வயதிற்குட்பபட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் உதவி உபகரணங்கள் தேர்வு முகாம், வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து அனைவரும் அறியும் வகையில் வட்டார வள மையம் சார்பில் மேற்பார்வையாளர் சரஸ்வதி தலைமையில் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப் பங்கேற்று பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் ஒருங்கிணைப்பாளர் சுடலைராஜ், ஆசிரியர் பயிற்றுநர்கள் கவிதா, தேவிகா, பொற்செல்வி, சரவணன், இயல்முறை மருத்துவர் பிரபாகரன், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் திருத்தணி நகர் முழுவதும் ஊர்வலமாக சென்று மருத்துவ முகாம் குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT