திருவள்ளூர்

பைக் மீது கார் மோதியதில் ஊழியர் பலி

6th Jul 2019 12:20 AM

ADVERTISEMENT

திருவள்ளூர் அருகே கார் இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் அருகே உள்ள திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர்  பாலமுருகன்(38). காக்களூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 
அவர் வழக்கம் போல் வியாழக்கிழமை பணிக்குச் சென்றார். அவரது நண்பர் நடத்தும் ஹோட்டலில் மதியம் சாப்பிட்டார். அங்கிருந்து பாலமுருகன் தனது நிறுவனத்திற்கு சென்றபோது சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கிச் சென்ற கார் அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. 
இதில் தலையில் பலத்த காயமடைந்த பாலமுருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT