புழல் அருகே குடும்பச் செலவுக்கு தந்தை பணம் தராததால் வேதனையடைந்த இளைஞர் தீக்குளித்தார்.
சென்னை பெரம்பூர் தீட்டித் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(38). அவருடைய தந்தை ஏழுமலை, புழல் பகுதியில் வசித்து வரு கிறார். கண்ணன் வெள்ளிக்கிழமை தன் தந்தையின் வீட்டுக்கு வந்து குடும்பச் செலவுக்கு பணம் கேட்டார். எனினும், ஏழுமலை பணம் தர மறுத்து விட்டார். இதனால் வேதனையடைந்த கண்ணன் பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கண்ணன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புழல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.