திருவள்ளூர்

அரிமா சங்கம் சார்பில் பள்ளிக்கு குடிநீர் வசதி

4th Jul 2019 06:59 AM

ADVERTISEMENT

அரிமா சங்கம் சார்பில் செங்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட்டது.
 இப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் வசதி இன்றி அவதிக்குள்ளாகி வந்தனர். 
இந்நிலையில், செங்குன்றம் அரிமா சங்கம் சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தி, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. குடிநீர் வசதியை பள்ளிக்கு ஒப்படைக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. 
பள்ளித் தலைமை ஆசிரியர் பிரேமகுமாரி தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்ட துணைச் செயலர் இரா.ஏ.பாபு, நிர்வாகிகள் ஜி.சீனிவாசன், கே.டி.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கு அமைக்கப்பட்ட குழாய்களை அரிமா சங்க மாவட்ட ஆளுநர் ஆர்.சுரேஷ் திறந்து வைத்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT