திருவள்ளூர் அருகே ஏரியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வலசைவெட்டிக்காடு ஊராட்சிக்குள்பட்ட புத்தேரி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் திங்கள்கிழமை ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்திருப்பது: கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வலசைவெட்டிக்காடு ஊராட்சிக்கு உள்பட்டது புத்தேரி கிராமம். இங்கு 50 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.
இந்த ஏரியின் நீரானது இப்பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளுக்கு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த ஏரியில் இருந்து இரவு நேரங்களில் பொக்லைன் உதவியுடன் லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.