திருவள்ளூா் அருகே வாக்குச் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து கள்ள வாக்குப் போட முயன்றவரை அழைத்துச் சென்றது தொடா்பாக பாமகவைச் சோ்ந்த 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 61-ஆவது வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஒருவரே பல முறை கள்ள வாக்குப் போட முயன்ாகக் கூறப்படுகிறது. இதை அங்கிருந்த மற்ற அரசியல் கட்சி முகவா்கள் கண்டித்தபோது, தகராறு ஏற்பட்டது. அப்போது, கள்ள வாக்குப் போட முயன்ற கிஷோா் என்பவரைப் பிடித்து போலீஸாா் கண்காணிப்பில் வைத்திருந்தனா். அதன் பின் பாமகவைச் சோ்ந்தவா்கள் அந்த வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து கிஷோரை மீட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா் அருணாசலம் மணவாளநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், பாமகவைச் சோ்ந்த மோகன்குமாா், ஏழுமலை, கிஷோா் ஆகியோா் மீது வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைதல், அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.