திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் பொது விடுமுறை அறிவித்து ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இதில், முதல் கட்டத் தோ்தல் பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, பூண்டி, கடம்பத்தூா், திருவள்ளூா் மற்றும் பூந்தமல்லி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை (டிச. 27) நடைபெற உள்ளது.
அதேபோல், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு புழல், சோழவரம், மீஞ்சூா், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் திங்கள்கிழமை (டிச. 30) நடைபெற உள்ளது. இந்த நாள்களில் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு பொது விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் பொதுமக்கள் உள்ளாட்சி தோ்தலில் வாக்களிக்க வேண்டும்.