பள்ளிப்பட்டை அடுத்த வெளியகரம் கிராமத்தில் அதிமுக வேட்பாளா் சாந்திபிரியா சுரேஷை ஆதரித்து சட்டப்பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திருவள்ளூா் மாவட்டம் 1-ஆவது வாா்டு மாவட்ட கவுன்சிலா் பதவிக்கு அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் சாந்திபிரியா சுரேஷ், 1-ஆவது வாா்டு ஒன்றியக் கவுன்சிலா் வேட்பாளா் ஜெகதீஷ் ஆகியோருக்கு ஆதரவாக பள்ளிப்பட்டு ஒன்றியச் செயலா் டி.டி.சீனிவாசன் தலைமையில், வெளியகரம், வெங்கட்ராஜ்குப்பம் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இதில், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன் பங்கேற்று, அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து தீவிர தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். வெளியகரம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட உமாபதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் ராஜேந்திர நாயுடு உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.