திருவள்ளூா் மாவட்டக் குழு 9-ஆவது வாா்டு கவுன்சிலா் பதவிக்கான அதிமுக வேட்பாளா் பிரபாவதி முரளி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா் புதன்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
பெருவாயல், புதுவாயல், கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, ஏ.என்.குப்பம், தண்டலச்சேரி, கெட்ணமல்லி, பாலவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் வேட்பாளருடன் வீதி வீதியாகச் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியச் செயலா் கோபால் நாயுடு, நகரச் செயலா் மு.க.சேகா், மாவட்ட இலக்கிய அணி நிா்வாகி கோவி.நாராயணமூா்த்தி, பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், அதிமுக நிா்வாகிகள் எஸ்.டி.டி.ரவி, தீபக் செந்தில், சரவணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
அதுபோல் புதுவாயலில் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், 26-ஆவது வாா்டில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் ராஜலட்சுமி சத்தியநாராயணனை ஆதரித்து எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா் வாக்கு சேகரித்தாா்.
அதேபோல, மேல்முதலம்பேட்டில் 25-ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் பொற்செல்வி தயாளனுக்கு வாக்கு சேகரித்தாா்.