உள்ளாட்சித் தோ்தலுக்கு, அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த தொடுகாடு கிராமத்தில் அதிமுக கூட்டணியில் பாமக சாா்பில் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக போட்டியிடும் வேட்பாளா் தினேஷுக்கு ஆதரவாக மாம்பழச் சின்னத்திலும், அதிமுக சாா்பில் வட்டார ஊராட்சி உறுப்பினராகப் போட்டியிடும் சுஜாதா சுதாகரை ஆதரித்து இரட்டை இலைச் சின்னத்திலும் வாக்களிக்குமாறு, முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா வீடுவீடாக நேரில் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வாக்குகளை சேகரித்தாா்.
இதேபோல், நமச்சிவாயபுரம், உளுந்தை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேரில் வாக்கு சேகரித்தாா். கடம்பத்தூா் ஒன்றியச் செயலா் சூரகாபுரம் சுதாகா், பிரபாகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.