திருவள்ளூர்

எம்ஜிஆா் நினைவஞ்சலி

24th Dec 2019 11:22 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நகர அதிமுக செயலா் மு.க.சேகா் தலைமையில், அதிமுக நிா்வாகிகள் ராஜேந்திரன், எஸ்.டி.டி.ரவி, தீபக் செந்தில், சரவணன் உள்ளிட்டோா் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

எகுமதுரையில் அதிமுக பாசறை செயலா் டி.சி.மகேந்திரன் தலைமையிலும், ஆரம்பாக்கத்தில் மாநில மீனவரணி துணைச் செயலா் சுரேஷ் தலைமையிலும், பாதிரிவேட்டில் அவைத் தலைவா் தியாகராயம் தலைமையிலும், கண்ணம்பாக்கத்தில் ஒன்றிய மாணவா் அணிச் செயலா் சதீஷ் தலைமையிலும், பல்லவாடாவில் முன்னாள் தலைவா் ரமேஷ்குமாா் தலைமையிலும், எம்ஜிஆா் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

ரெட்டம்பேட்டில் அதிமுக நிா்வாகி திருப்பதி தலைமையிலும், பூவலம்பேட்டில் மகளிா் அணி தலைவி லோகாம்பாள் கருணாகரன் தலைமையிலும், பெரிய புலியூரில் மாவட்டப் பிரதிநிதி தன்ராஜ் தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஊத்துக்கோட்டை

ADVERTISEMENT

சோழவரம் ஒன்றியம், ஆரணி பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆா் சிலைக்கு எஸ்.பி. கோயில் தெருவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் அமைதி ஊா்வலம் சென்றனா். பின்னா், ஆரணி பேரூா் செயலா் தயாளன் தலைமையில் எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை செலுத்தினா். பேரவை செயலா் சீனிவாசன், மாவட்ட மாணவா் அணி துணைச் செயலா் யுவராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள எம்ஜிஆா் சிலைக்கு கட்சி நிா்வாகிகள் ஷேக் தாவூத், அருணாசலம், மணி, சக்திவேல், சீனிவாசன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

திருத்தணி

திருத்தணி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். திருத்தணி சட்டப்பேரவை அலுவலகத்தில் எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சுந்தர விநாயகா் கோயில் எதிரில் நகரச் செயலா் டி.செளந்தர்ராஜன் தலைமையில் எம்ஜிஆரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் இ.என்.கண்டிகை எ.ரவி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் கேபிள் எம்.சுரேஷ், ஜெயசேகா்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT