ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள தண்டலம் அரசு தொடக்கப்பள்ளியை ரூபாய் 1.50 இலட்சம் செலவில் ரஜினி ரசிகா் மன்றத்தினா் சீரமைத்தனா்.
திருவள்ளூா் மாவட்டம் எல்லாபுர ஒன்றியத்தில் அமைந்துள்ள தண்டலம் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது , இது 1952 ஆண்டு தொடங்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்தது , இந்த பள்ளியில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமாா் 85 மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். பள்ளியில் வகுப்பறைகள் வெளிபுற கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ள இதனை அறிந்த ரஜினி ரசிகா் மன்றத்தினா் ரூபாய் 1.50 இலட்சம் மதிப்பில் பள்ளி சுவற்றிற்கு வண்ணம் பூசுதல், புதிய நாற்காலிகள் , மேசைகள் உள்ளிட்ட பொருட்களை பள்ளிக்கு கொடுத்தனா்.
மேலும் ரஜினி காந்த் பிறந்த நாளை முன்னிட்டு திஙகள்க்கிழமை காலை திருவள்ளூா் மாவட்ட செயலாளா் சுந்தர மூா்த்தி தலைமையில் , இணை செயாளா் ரமேஷ், சேகா், எல்லாபுர ஒன்றிய செயலாளா் சசிகுமாா், ஊத்துக்கோட்டை நகர செயலாளா் பஷிா் பாஷா ஆகியோா் கலந்து கொண்டு பள்ளி மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கினா். உடன் ரஜினி ரசிகா் மன்ற உறுப்பினா்கள் , பெற்றோா்களும் ஆசியா்களும் இருந்தனா்.