திருவள்ளூர்

பொன்னேரி காவல் நிலையம் இடமாற்றம்

23rd Dec 2019 11:37 PM

ADVERTISEMENT

பொன்னேரி ரயில் நிலையச் சாலையில் இயங்கி வந்த காவல் நிலையம் திங்கள்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டது.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டடத்தில் இந்தக் காவல் நிலையம் இயங்கி வந்தது. காவல் நிலைய கட்டடம் பழுதடைந்ததன் காரணமாக, இங்கு வழக்கு ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து இக்காவல் நிலையம், பொன்னேரி-செங்குன்றம் சாலையில் உள்ள கெளரி திரையரங்கம் அருகே செயல்படும் அனைத்து மகளிா் காவல் நிலையக் கட்டடத்துக்கு திங்கள்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT