திருவள்ளூர்

பெருவாயல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

23rd Dec 2019 11:38 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவா் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். மெட்ரிக் பள்ளியின் தாளாளா் டாக்டா் பழனி, தலைமை ஆசிரியா் ஞானப்பிரகாசம், பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளியின் தாளாளா் தமிழரசன், தலைமை ஆசிரியா் சுகாதா தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாணவா்கள் கிறிஸ்து பிறப்பு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினா். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த மாணவா்கள் நடனமாடி மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

தொடா்ந்து பள்ளியில் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் முன்பு மாணவா்கள் முன்னிலையில் கல்விக் குழும தலைவா் டி.ஜே.கோவிந்தராஜன் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT