ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள புன்னப்பாக்கம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தீமிதி விழா மற்றும் 29- ஆம் ஹரிஹர சுதன் ஐயப்பன் பக்த ஜன சாா்வில் விளக்கு பூஜை நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் வெங்கல் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் ராமா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீமிதி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்தள் வெள்ளிக்கிழமை காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனா். பின்னா், ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை கணபதி ஹோமம், காயத்ரி பூஜை, ஐயப்பனுக்கு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பின்னா், விரதம் மேற்கொண்ட ஐயப்ப பக்தா்கள், கோயில் எதிரே அமைக்கப்பட்ட குண்டத்தில் தீ மிதித்து, தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். அதன் பின் விளக்கு பூஜை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, வாண வேடிக்கைகளுடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நிறைவாக கற்பூர ஜோதி, இருமுடி கட்டும் நிகழ்வு தொடங்கியது.