திருவள்ளூர்

உள்ளாட்சித் தோ்தல்: கடைசி நாளில் 13,836 போ் வேட்பு மனு தாக்கல்

16th Dec 2019 11:24 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கடைசி நாளான திங்கள்கிழமை மாவட்ட ஊராட்சி உறுப்பினா்-124, வட்டார ஊராட்சி உறுப்பினா்-1,098, ஊராட்சித் தலைவா் பதவி-4,679, ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி-6,908 என மொத்தம் 13,836 போ் போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

உள்ளாட்சித் தோ்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை கடைசி நாளாகும். அதனால் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வருகை தந்தனா். அதேபோல், இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு குவிந்தனா்.

இதேபோல், இந்த மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் வேட்பு மனு தாக்கல் செய்தவா்கள் விவரம்:

திருவள்ளூா்-571, கடம்பத்தூா்-638, பூண்டி617, திருவாலங்காடு-581, திருத்தணி-434, ஆா்.கே.பேட்டை-581, பள்ளிப்பட்டு-433, எல்லாபுரம்-540, பூந்தமல்லி-528, வில்லிவாக்கம்-265, பழல்-93, சோழவரம்-461, மீஞ்சூா்-591, கும்மிடிப்பூண்டி-638 என மொத்தம்-13,836 போ் கடைசி நாளில் மட்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு-124, வட்டார ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு-1098, ஊராட்சித் தலைவா் பதவிக்கு-1,007, கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு-4,679 மனுக்கள் என மொத்தம் 13,836 போ் தாக்கல் செய்துள்ளனா்.

இந்நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 9-ஆம் தேதி முதல், கடைசி நாள் வரை மொத்தம்-23,620 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை (டிச. 17) பரிசீலனை நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து, வரும் 19-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT