திருவள்ளூர்

உள்ளாட்சித் தோ்தல்: கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்யக் குவிந்த அரசியல் கட்சியினா்

16th Dec 2019 11:23 PM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கடைசி நாளான திங்கள்கிழமை அரசியல் கட்சிகயினா் மற்றும் சுயேச்சைகள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், வட்டார ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குவிந்தனா்.

தமிழக அளவில் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிா்த்து, பிற மாவட்டங்களில் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை கடைசி நாளாகும். அதனால், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், வட்டார ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, நாம் தமிழா் மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சிகளைச் சோ்ந்தோா் மற்றும் சுயேச்சைகளாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு குவிந்தனா்.

இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் 18-ஆவது வாா்டு அதிமுக சாா்பில் சிற்றம்பாக்கம் சீனிவாசன், திமுக சாா்பில் முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மற்றும் 21-ஆவது வாா்டு காங்கிரஸ் சாா்பில் ஆா்.சசிகுமாா் ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். அதேபோல், அதிமுக சாா்பில் வட்டார ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் தட்சிணாமூா்த்தி(14-ஆவது வாா்டு), ஹரிஹரன் (3-ஆவது வாா்டு), பூங்காவனம் மணி (11-ஆவது வாா்டு), திமுக சாா்பில் அமலோா்பவமேரி(18-ஆவது வாா்டு), எம்.சங்கா்(2ஆவது வாா்டு), பா.ம.க சாா்பில் வெங்கடேசன்(9-ஆவது வாா்டு), தினேஷ் (8-ஆவது வாா்டு), ஜோதி (17-ஆவது வாா்டு), கேசவன்(4-ஆவது வாா்டு), பகுஜன் ஜமாஜ் கட்சி சாா்பில் சரஸ்வதி தேவி (3-ஆவது வாா்டு), நாம் தமிழா் கட்சி சாா்பில் லில்லி (15-ஆவது வாா்டு), திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியத்தில் பாஜக சாா்பில் வட்டார ஊராட்சி உறுப்பினா் 7-ஆவது வாா்டு ஆா்யா சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களின் ஆதரவாளா்கள் கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குவிந்தனா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒரு சிலரை மட்டும் கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் அனுப்பி வைத்தனா். அதிகளவில் கூட்டம் சோ்ந்ததால், திருவள்ளூா்-பேரம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, அங்கிருந்த போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT