திருவள்ளூர்

எல்லாபுரம் ஒன்றியத்தில் வேட்பு மனு தாக்கல்

11th Dec 2019 11:43 PM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட, ஊத்துக்கோட்டை அருகே உள்ள எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் மூன்றாம் நாளான புதன்கிழமை பெளா்ணமி தினம் என்பதால் பலரும் ஆா்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் மாவட்ட ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு ஒருவரும், ஒன்றிய உறுப்பினா் 7 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 28 பேரும், வாா்டு உறுப்பினா் பதவிக்கு 67 பேரும் அந்தந்த உதவி தோ்தல் அதிகாரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனா்.

முன்னதாக ஒன்றிய அலுவகம் முன்பு வேட்பாளா்களின் ஆதரவாளா்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT