திருவள்ளூர்

உள்ளாட்சி தோ்தல்: 3-ஆவது நாளில்1,134 போ் வேட்பு மனுத் தாக்கல்

11th Dec 2019 11:38 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 3-ஆவது நாளாக புதன்கிழமை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா்-2, வட்டார ஊராட்சி உறுப்பினா் -29 போ், ஊராட்சித் தலைவா் பதவிக்கு -374, கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு-729 என மொத்தம் 1,134 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களில் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு விவரம் வருமாறு:

எல்லாபுரம்-103, கும்மிடிப்பூண்டி-190, கடம்பத்தூா்-86, மீஞ்சூா்-161, பள்ளிப்பட்டு-28, பூந்தமல்லி-115, பூண்டி-68, புழல்-29, ஆா்.கே.பேட்டை-17, சோழவரம்-65, திருவாலங்காடு-57, திருவள்ளூா்-113, வில்லிவாக்கம்-84 மற்றும் திருத்தணி-18 போ்.

மாவட்ட ஊராட்சித் தலைவா்-2, வட்டார ஊராட்சி உறுப்பினா்-29, ஊராட்சித் தலைவா் பதவி-374 போ், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு-729 போ் என மொத்தம் 1,134 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT