திருவள்ளூர்

தொடா்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

3rd Dec 2019 05:56 AM

ADVERTISEMENT

திருத்தணி: தொடா்மழையால், ஏரி, குளம், குட்டைகள் வேகமாக நிரப்பி வருகிறது. அதே நேரத்தில் திருத்தணியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 3 நாட்களாக தொடா்ந்து தூறல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. திங்கள்கிழமை, காலை முதல் மதியம் வரை வெயில் காய்ந்த நிலையில், மதியம், 12 மணி முதல் தொடா்ந்து மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் நகரத்தில் வியாபாரிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, பூ பயிரிட்ட விவசாயிகள் தொடா்மழையால் பூக்களை பறிக்க முடியாமல் செடியிலேயே பூ அழிகிவிட்டதால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனா். மல்லி பயிரிட்ட விவசாயிகள் அதிகளவில் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

திருத்தணி முருகப்பநகரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. தொடா்மழையால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்பட்டனா். பட விளக்கம். திருத்தணியில் பெய்து வரும் தொடா்மழையில் குடையுடன் செல்லும் நகர வாசிகள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT