திருவள்ளூர்

திருவள்ளூரில் பலத்த காற்றுடன் கன மழை

29th Aug 2019 04:20 AM

ADVERTISEMENT


திருவள்ளூர் பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. 
திருவள்ளூர் பகுதியில் புதன்கிழமை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், மாலையில் கருமேகம் சூழ்ந்து திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 45 நிமிடங்களுக்கு மழை பெய்தது. மழையால் சாலைகளில் மழை நீர் வழிந்தோடியது. 
மேலும், பேருந்து நிலையத்தில் நீர்குளம் போல் தேங்கியதால் பொதுமக்கள் நனைந்தபடி சென்றனர். இதேபோல், பஜார் பகுதி மற்றும் காய்கறிச் சந்தை பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியது.  திருவள்ளூர் பகுதியில் புதன்கிழமை வெயில் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், மாலையில் மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.         
திருத்தணியில்...
திருத்தணி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் புதன்கிழமை பெய்த மழையால் மாணவர்கள் வீட்டுக்குச் செல்ல கடும் அவதிப்பட்டனர்.
திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த நான்கு நாள்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. 
இந்நிலையில், மாலை 4 மணிக்குப் பின் திருத்தணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு மணி நேரம் பலத்த மழையும், பின்னர் தூறல் மழையும் பெய்தது.மாலை நேரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பள்ளி மாணவர்கள் சிரமத்துக்குள்ளாயினர். மேலும், அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் சென்ற அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களும் சிரமத்துக்குள்ளாயினர். அதேசமயம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT