திருத்தணி ஒன்றியம், சீனிவாசபுரம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், திருத்தணி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் குழந்தைத் திருமணம் மற்றும் வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தைத் திருமணம் தடுத்தல் உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டது.
இதில், வழக்குரைஞர்கள் புருஷோத்தமன், கருணாகரன், தன்னார்வலர்கள் ரமேஷ், சோம்ராஜ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார்.