மீஞ்சூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து, 30 சவரன் நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மீஞ்சூர் ராஜம்மாள் நகரில் வசிப்பவர் பாலகங்காதரன் (66). இவரது உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க இரு நாள்களுக்கு முன் வந்தவாசி சென்றுவிட்டு, திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளேசென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் நகை, 3 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 10ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.