திருவள்ளூர்

தாமரை ஏரியில் ரூ. 3 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

27th Aug 2019 08:14 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி தாமரை ஏரிக்கரையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ. 3 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய் துறையினர் திங்கள்கிழமை மீட்டனர்.
 கும்மிடிப்பூண்டி தாமரை  ஏரிக்கரையையொட்டி, 41 வீடுகள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினர் மூலம் மேற்கண்ட 41 வீடுகளின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கை மற்றும் அவகாசம் தரப்பட்டது. மேலும் அவர்களுக்கு 14 கி.மீ. தொலைவில் சூரப்பூண்டியில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டது.
 இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் வருவாய்த் துறையினர் தாமரை ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர். அப்போது பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், வருவாய்த் துறையினர் வீடுகளை காலி செய்ய மேலும் 3 நாள்கள் அவகாசம் அளித்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார் தலைமையிலும், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு முன்னிலையிலும் கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் ஜெயகுமார் தலைமையில் 100 போலீஸார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.  இதன் மூலம் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த  அரசு நிலம் மீட்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT