திருவள்ளூர்

போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை: 2 பேர் கைது

23rd Aug 2019 04:17 AM

ADVERTISEMENT

திருத்தணியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர்.
 திருத்தணி நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் 4 பேர் கொண்ட சிறப்பு காவல் படை அமைத்து திருத்தணி நகரில் அனைத்துக் கடைகளிலும் வியாழக்கிழமை திடீர் சோதனை செய்தனர்.
 அதில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருள்களை சிறப்பு படை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், டம்ளர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
 இதுதவிர ராஜேந்திரபாபு (35), மூக்காண்டி (62) ஆகிய இருவரின் கடைகளில் அதிகளவில் குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருந்தைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT