குழந்தைகள் பாதுகாப்பு கருத்துரு வரவேற்பு

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் அடங்கிய புற தொடர்பு திட்டத்துக்கு தன்னார்வத் தொண்டு

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் அடங்கிய புற தொடர்பு திட்டத்துக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்பதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு, சமூகப் பாதுகாப்புத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு சேவை திட்டத்தின் கீழ், குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் தங்க வைக்க இயலாத பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் அடங்கிய புற தொடர்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதனால், குழந்தைகளுக்கான இத்திட்டத்தை செயல்படுத்த தகுதிவாய்ந்த பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. 
இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டுதல் விளக்கக் குறிப்புகள் h‌t‌t‌p‌s:‌t‌i‌r‌u‌v​a‌l‌l‌u‌r.‌n‌i​c.‌i‌n  என்ற திருவள்ளூர் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவங்களை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், எண். 48, ஜே.என்.சாலை, திருவள்ளூர்- 602 001 என்ற முகவரிக்கு அடுத்து வரும் 15 நாள்களுக்குள் அனுப்பி வைக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com