சமூக நீதிக்கான பெரியார் விருது பெற தகுதியானவர்கள் அக்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சமூக நீதிக்காகப் பாடுபடுவோரைச் சிறப்பிக்கும் நோக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் சமூக நீதிக்கான பெரியார் விருது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான விருது பெறத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சமூக நீதிக்காகப் பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான பணிகள் மேற்கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், கடந்த ஆண்டுகளில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பணிகள், சாதனைகள் ஆகியவைகளுக்கான சான்று ஆவணங்கள், விண்ணப்பதாரரின் முழு விவரங்களுடன் வரும் அக்.10 ஆம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு தங்கப்பதக்கத்துடன், ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.