திருவள்ளூர்

வீட்டில் திருட முயன்ற இருவர் கைது

11th Aug 2019 12:58 AM

ADVERTISEMENT


திருவள்ளூர் அருகே ஆள் இல்லாத வீட்டில் நுழைந்து திருட முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர். 
திருவள்ளூரை அடுத்த காக்களூர் தேவா நகரைச் சேர்ந்தவர் விஜயராகவன் (30). இவர், வெள்ளிக்கிழமை காலை வேலைக்குப் புறப்பட்டார். இவரது மனைவி அருகில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மர்ம நபர்கள் இருவர் விஜயராகவனின் வீட்டுக்குள் நுழைந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களைப் பிடிக்க முயன்றனர். அப்போது, மாடி வளாகம் வழியாக ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்றொரு நபர் தவறி விழுந்துள்ளார். அவரைப் பிடித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருவள்ளூர் கிராமிய போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பிடிபட்டவர் சாதிக்  (25) என்பதும், தப்பியோடியவர் பெயர் முகைதீன் (30) என்பதும் தெரியவந்தது.  இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT