திருவள்ளூர்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

11th Aug 2019 12:58 AM

ADVERTISEMENT


திருவள்ளூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் அருகே போளிவாக்கம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த செல்வியின் மகள் யமுனா (20). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முரளிக்கும் (25) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 6 மாதங்களாக தாயார் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை  யமுனா வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது. 
இதையறிந்த செல்வி மற்றும் அக்கம் பக்கத்தினர் யமுனாவை மீட்டு,  சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு யமுனா சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மணவாளநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT